ஆப்பிள், சமூக ஊடக போட்டியில் இறங்க‌ உள்ளது

Apple may build a video sharing app like snapchat and enter the social media wars

ஆப்பிள் (Apple) ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற‌ ஒரு பயன்பாட்டினை (App) உருவாக்கி சமூக ஊடக (Social Media) போட்டியில் இறங்க‌ உள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனம் வீடியோ பகிர்வு பயன்பாடு (Video Sharing App) ஒன்றினை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்த‌ பயன்பாட்டில் பயனர்கள் வீடியோவினை பதிவு செய்து (Record Video) ஸ்னாப்சாட் போன்று வீடியோவில் (video) ஃபில்டர் மற்றும் வரைதல்கள் (filter and drawings over video) செய்து உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் (Contact list) உள்ளவர்களுக்கு பகிர‌ முடியும் (Share videos). மற்ற சமூக நெட்வொர்க்குகளிலும் பகிர‌ (Other social networks) முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய‌ ப‌யன்பாடு, ஒரு கையால் பயன்படுத்தக்கூடிய வகையில், ஒற்றைகையில் படம்பிடித்து (வீடியோ), எடிட் (திருத்தம்) செய்து அப்லோடு செய்வதற்கு "குறைவாக‌ ஒரு நிமிடம்," எனும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த‌ பயன்பாடு தனித்தியங்கும் (Standalone App) மற்றும் ஆப் ஸ்டோர் வழியாக தரவிறக்கம் (Apple app store download) செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள், தந்து கேமரா பயன்பாட்டினுள் இப்பயன்பாட்டினை அமைக்கக்கூடும் வாய்ப்பும் இருப்பதாக‌ கூறப்படுகிறது.

ஆப்பிள் ஸ்னாப்சாட் (Snapchat) பயன்பாட்டிற்கு போட்டியாக‌ இறங்கினால், இப்பயன்பாட்டிற்கு நிச்சயமாக‌ ஆண்ட்ராய்டு பதிப்பு உண்டாகும் வாய்ப்பும் உள்ளது.

ஆதாரம் : VB news

நாள் : 27.08.2016 திருத்தம் : 27.08.2016

புதியவை / Recent Articles