வெளியிட்ட தேதி : 03.12.2016
Drones for Apple map App
Technology

Apple will use flying drones to collect data for Apple Maps. Also developing indoor mapping features

ஆப்பிள் நிறுவனம் அதன் மேப் ஆப்பில் நேவிகேஷன் திறன்களை (Navigation abilities in Apple Map App) மேம்படுத்தவும் அதிகபடியான‌ தகவல்களைப் பெறவும் ட்ரான்ஸ்களை (drones / ஆளில்லா சிறு விமானம்) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் (Apple) அதன் ஆப்பிள் மேப்பிற்கான‌ (Apple Map) டேட்டா சேகரிப்பதற்கு பல‌ பறக்கும் ட்ரான்ஸ்களை அணியமைத்து பணிசெய்ய‌ திட்டமிட்டுள்ளது. ட்ரான்ஸ்களால், தெரு அறிவிப்பு பலகைகள், சாலைப் பணிகளின் நிலையைக் கண்காணித்து ஆய்வுசெய்ய‌ முடியும்.

ஏற்கனவே கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களைக் கொண்ட‌ குழுவினை பயன்படுத்தி தரை வழியாக‌ ஆப்பிள் தனது மேப்பிற்கான‌ தகவல்களை சேகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் இந்த கார்கள் தொடர்ந்து பல‌ இடங்களில் புகைப்படங்களை எடுத்து சாலைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றது. ட்ரான்ஸ்களைப் பயன்படுத்துவதால் இந்த தரவு சேகரிப்பு பணி மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவினில் பெறமுடியும். மேலும் கார்கள் செல்ல‌ இயலாத‌ இடங்களிலும், பாதசாரிகள் சாலையினைக் கடக்கும் இடங்களிலும் சென்ற‌டைய முடியும்.

எனினும், ட்ரான்ஸ் (ஆளில்லா சிறு விமானம்) வணிகரீதியான தரவு சேகரிப்பு நோக்குடன் பறக்க‌ விடுவதற்கு, எங்கே, எப்போது எனக் கட்டுப்பாடுகள் நிறைய உள்ளன (regulations for flying drones for commercial data collection purposes). ஆப்பிள், வணிக நோக்கங்களுக்காக அமெரிக்காவில் ட்ரான்ஸ்களை அனுமதிக்கும் பொருட்டு FAA ஒப்புதலுக்காக‌ மனுதாக்கல் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மேப்பினில் உட்புற இடம் மேப்பிங் அம்சங்கள் (Indoor mapping features for Apple Maps) என‌ மேலும் விரிவுபடுத்தி மேம்படுத்துவதால் கூகுள் மேப்புடன் போட்டியாக‌ விளங்கக் கூடும். புது அம்பங்கள், ஒரு ஆப்பிள் பயனரை கட்டிடங்களின் உள்ளேயிருக்கும் இலக்கு தனை அடைய‌ தங்கள் ஐபோன் வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

புது ஆப்பிள் மேப் மேம்படுத்தலின் மூலம் ஆப்பிளின் iOS and macOS போன்ற சாதனங்களில் ஆப்பிள் மேப்பின் தரம் உயரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆப்பிள் தனது மேப் சேவையை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கூஃகுள் மேப்ஸின் பிராதான‌ அம்சமான‌ நேவிகேஷன் சேவையானது உலக‌ மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் பயன்பாடாக‌ உள்ளது. உலகின் பல நாடுகளின் தெரு காட்சிகள் கொண்டிருக்கும் கூகுள் மேப்ஸ் இலக்கினை சென்றடைவதற்கு உதவியாக‌ விளங்கும் சட்டைப்பையில் நண்பன் போல் உள்ளது. ஆப்பிள் கூகுள் மேப்ஸ்க்கு நிகராக‌ அதன் நேவிகேஷன் சேவைகளில் (Map navigation services) இருக்கும் இடைவெளியினை மூட முயற்சித்து வருகின்றது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.