ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் தேடல் விளம்பரங்களைத் தொடங்குகிறது

Apple to launch Search Ads for its app store
Gadgets

Apple to launch Search Ads for its app store

ஆப்பிள் அதன் iOS தளத்தில் (Apple iOS) தேடல் விளம்பரங்களை (search Ads launch) அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பயனர் தேடல் மேற்கொள்ளும்போது தேடல் முடிவுகளின் (Search Results) மேலே விளம்பரங்கள் காண்பிக்கப்படும். இப்போது வரையிலும் டெவலப்பர்கள் விளம்பர பிரச்சாரங்கள் (Ad Campaigns) பதிவு மற்றும் அட்டவணை (Register and schedule) செய்யலாம், ஆனால் அக்டோபர் 5 வரை செயல்படுத்த‌ முடியாது.

தேடல் மற்றும் ஏல தொகை (Bid amount) சம்பந்தம் அடிப்படையில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும்(Ads Display). மற்ற‌ பிரச்சாரம் அமைப்பு செயல்முறைகளைப்போல‌ (campaign Setup process) ஆப்பிளின் அமைப்பிலும் தினசரி செலவு வரம்புகள் (daily spending limits) , திறவுச் சொல் தேர்வு (keyword selection), பிரச்சார‌ துவக்க‌ நாள், முடிவுறும் நாள் (Campaign Start and Ending date and time), நாளின் மணி நேரம் என‌ முன்னரே அட்டவணை செய்யும் வசதி, வரவு-செலவுத் திட்டம் (Budget Planning) என‌ டெவலப்பர்கள் (Apple App Developer) நேரடியாக‌ திட்டமிட‌ வழிவகுக்கும்.

டெவலப்பர்கள் கட்டண தகவல் (Payment information) மற்றும் பிற விவரங்களை ஆப்பிளுக்கு வழங்க‌ வேண்டும்.

நாள் : 29.09.2016 திருத்தம் : 29.09.2016