Gears

Apple Bans 250s Of iPhone Apps for violating user privacy

ஆதாரம் ஃபோர்ப்ஸ் இணையதளம்

ஒரு சீன‌ விளம்ப‌ர‌ நிறுவனத்தின் மென்பொருளினை பயன்படுத்திய‌ சுமார் 250 ஐபோன் ஆப்கள் தனிநபர் விவரங்களை சேமித்து வந்ததை ஆப்பிளின் மறு ஆய்வில் கண்டறிந்ததன் விளைவாக‌ அவை இரத்து செய்யப்பட்டு ஆப்பிளின் ஐபோன் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டன‌. மேலும் இந்த‌ 250 ஆப்கள் சுமார் இருவருடமாக‌ கண்டறியப்படவில்லை என்பது உண்மை.

யூமி (Youmi) என்ற‌ பெயருடைய‌ நிறுவனம் டெவலப்பர்களுக்குத் தேவயான‌ SDK களை வழங்கிவந்த‌து. இந்த‌ SDK களை பயன்படுத்தும் ஆப்கள் (கைபேசி பயன்பாடு) ஐபோனில் நிறுவப்பட்டால் பயன்படுத்தும் நபரின் மின்னஞ்சல், அவர் பதிவிறக்கம் செய்த‌ ஆப்கள் (downloaded apps), ஸ்மார்ட்ஃபோனின் சீரியல் எண் (smartphone's serial number) ஆகியவற்றை சரிபார்க்கும். இந்த SDK களை அடிப்படையாக கொண்ட‌ பயன்பாடுகள் 1 மில்லியனுக்கும் மேலாக‌ பதிவிறக்கம் பெற்றுள்ளன‌. மேலும் இந்த‌ ஆப்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீன‌ நாட்டினைச் சேர்ந்தவையே எனக் கண்டறியப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.