Facebook Whatsapp
Gadgets

Whatsapp's latest update: Picture-in-picture (PiP) video calling and text only statuses

வாட்ஸ் அப் (Whatsapp) இன் சமீபத்திய புதுப்பிப்பில் வீடியோவுடன் டெக்ஸ்ட் / PiP வீடியோ அழைப்பு மற்றும் மேசேஜிங் எனும் அதிரடி மாற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப்பின் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளன.

பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் அம்சம் ( Picture-in-Picture (PiP) video calling feature ) மூலம் உபயோகிஸ்தர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்துகொள்ளலாம். அதுபோல‌ வீடியோ கால் செய்யும்போது போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி ( resizing the video call ), பின்னணியில் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். தேவைக்கேற்ப அளவில் வீடியோ அழைப்பு திரையை சிறிதாக்கிக்கொள்ளவும் கைபேசித் திரையின் எந்த மூலையிலும் இழுத்து வைத்துக் கொள்ளவும் முடியும்.

வாட்ஸ் அப்பின் புது அப்டேட்ஸில் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இன்னொரு அப்டேட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் எப்படி 24 மணி நேரத்தில் தானாகவே மறைந்து விடுகின்றதோ அதுபோல டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.