WhatsApp abusive messages and threats
Gadgets

If receiving abusive text via WhatsApp Now you can file a complaint to DoT

வாட்ஸ்அப் பயனர்கள், விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி அவற்றை புகார் செய்யலாம் (Department of Telecom) என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தவறான செய்திகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பரவலை நிறுத்த வாட்ஸ்அப் நிறுவனம் (WhatsApp) இப்போது மத்திய தொலைத் தொடர்பு துறையுடன் (Department of Telecom - (DoT) கைகோர்த்துள்ளது (DoT).
WhatsApp இல் பெறப்பட்ட போலி செய்தி அல்லது வெறுப்பு செய்திகளை தொலைத் தொடர்பு துறைக்கு இப்போது பயனர்கள் தெரிவிக்கலாம். அவ்வாறு செய்ய, பயனர்கள் மொபைல் எண்ணுடன் பெறப்பட்ட செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ccaddn-dot@nic.in க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

துளிகள்

போலி செய்திகளை பரப்புவதன் காரணமாக தாக்குதல்கள் மற்றும் இறப்புக்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் கூட தவறான‌ தகவல்களைப் பெறுகின்றனர், வெறுக்கத்தக்க செய்திகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . புகார் செய்வதனால் டெலிகாம் ஆப்பரேட்டர்கள், பொலீஸ் தலைமையுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது குறித்து ஆஷிஷ் ஜோஷி, DoT - மத்திய தகவல் தொடர்புதுறை கட்டுப்பாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது: ‘வாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க தகவல்களை ஸ்கீரின் ஷாட் எடுத்து, அதனை ccadn-dot.nic.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் போது வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பரையும் சேர்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு வரும் புகார்களை காவல்துறைக்கும், தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது செல்போன் நிறுவனங்களின் கடமையாகும். விரும்பத்தகாத தகவல்களை வாடிக்கையாளர்கள் பெறுவது என்பது உரிமை மீறல்.’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜோஷி, ஒவ்வொரு மாநிலத்திற்குமான உரிமம் சேவை பகுதி (LSA), தொடர்பு அதிகாரி பட்டியலை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார், அவர்கள் டெலிகாம் ஆபரேட்டர்களின் குறைபாடு, சமூக ஊடக தொடர்புகளை ஆய்வு செய்வார்கள்.

License Service area Whatsaapp

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.