வெளியிட்ட தேதி : 09.01.2017
GeniCan scans your trash
Gadgets

GeniCan scans your trash and make grocery lists and arrange delivery through its mobile app

GeniCan குப்பைதொட்டி குப்பைகளை (trash) வீசும் முன்னர் ஸ்கேனிங் செய்யப்படுவதால் மளிகை பட்டியலை தயார்செய்து சாமான்களை டெலிவரி செய்ய ஏற்பாடும் செய்கிறது.

CES என்றால் என்ன‌ ?

நுகர்வோர் மின்னணுவியல் பொருட்காட்சியானது உலகின் மிக‌ முக்கியமான‌ தொழில்நுட்ப‌ வணிக‌ நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும் ( Consumer Electronics Show is one of the most prominent technology trade shows). ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெற்று வருகின்றது.

CES (Consumer Electronics Show) நிகழ்ச்சி திடலில் டஜன் கணக்கான‌ ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்கள் (smart home products) காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும் அனைவராலும் பேசப்பட்ட‌ பொருள் இந்த‌ ஸ்மார்ட் குப்பைதொட்டி உபகரனம் தான்.

GeniCan என்றால் என்ன‌

GeniCan என்பது ஒரு பார்கோடு ஸ்கேனர் மர்றும் குரல் அடையாளம் கண்டுபிடித்து உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் வீசுகின்ற‌ காலியான‌ பொருட்கள் / தேவையில்லா பொருட்களின் பார் கோடுகளை ஸ்கேனிங் செய்து மளிகை பொருட்களின் (grocery lists) பட்டியலினை தயார் செய்துவிடும்.

குப்பையை வீசும் முன் அதை GeniCan இல் காட்டி ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். GeniCan காலியான‌ அந்த‌ பொருளை அதனுடைய‌ மொபில் ஆப்பில் உள்ள‌ பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்.

பார்கோடு இல்லையென்றால் நீங்கள் வீசும் பொருளை GeniCan முன் பிடித்துக்கொள்ளுங்கள். இப்போது GeniCan உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்பும். நீங்கள் வீச்வது எந்த‌ பொருள் என‌ வினவும். உங்கள் வாயால் அதற்கு பதிலளித்துவிடுங்கள். இப்போது இப்பொருளும் பட்டியலில் சேர்ந்துவிடும்.

சிறப்பு என்னவென்றால் இந்த‌ காலியான‌ பொருட்களை வாங்குவதற்கு வீட்டிற்கு வெளியேச் செல்ல‌ வேண்டிய‌ அவசியமில்லை. உங்களுக்காக‌ அப்பட்டியலில் உள்ள‌ சாமன்களை பெறவும் GeniCan ஏற்பாடு செய்து கொள்ளும்.

மேலும் உங்களது குப்பைத்தொட்டி நிறைந்து விட்டால் உங்களது மொபைலிலோ அல்லது உங்களது குழந்தைகளின் ஃபோன்களுக்கோ மேசேஜ் செய்துவிடும். இப்போது ஞாபகமாக‌ நீங்கள் உங்களது குப்பையை கொட்ட‌ வேண்டியதுதான்.

GeniCan ஐ தற்போது $125 ப்றீ ஆர்டர் செய்துகொள்ளலாம். (available for pre-order at $125.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.