Gears

Microsoft's Windows 10 default desktop background

ஆதாரம் விண்டோஸ்10 பின்னணி படம் உருவாக்கப்பட்ட‌ படத்தொகுப்பு (வீடியோ)

ஜூலை 29 ம் தேதி வெளிவரும் விண்டோஸ் 10ல் இயல்புநிலை டெஸ்க்டாப் பின்னணிப் பட‌ வேலையில் சிறப்பு கவனம் செலுத்தும் விதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறந்த‌ கலைஞர்களைக் கொண்டு சிறப்பானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மைக்ரோசாஃப்டின் உத்தி

தனது தயாரிப்புகள் மீது முன்னோக்கு சிந்தனை கொண்ட மைக்ரோசாஃப்ட் கலைஞர்களைக் கொண்டு சிறந்த‌ துவக்கக்தினைச் செயல்படுத்துவது முதல் முறை அல்ல‌. இதற்கு முன்னர் இசைக்கலைஞர் பிரைன் இனோ விண்டோஸ் 95 க்கான பிரபலமான தொடக்க இசையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இம்முறை மைக்ரோசாஃப்ட் ட்ரான் முதலிய‌ சினிமாப் படங்களில் பணியாற்றிய சான் பிரான்சிஸ்கோ டிசைனர் பிராட்லி ஜி முகொவிட்ச் உடன் சேர்ந்து ஒரு கலை நயமிக்க‌ விந்தையான‌ டெஸ்க்டாப் பின்னணி படத்தினை உருவாக்க கூட்டாகப் பணியாற்றியது. ஒரு கண்ணாடி போன்ற‌ 3D மைக்ரோசாஃப்ட் லோகோ போன்ற‌ வடிவமைப்பினை உருவாக்க விளக்குகள், ப்ரொஜக்டர், கேமரா மேப்பிங் மற்றும் மூடுபனி இயந்திரம் பயன்படுத்தி விண்டோஸ் 10ன் இயல்பு நிலை பின்னணி படத்தினை உருவாக்கியுள்ளது.