First Automated Dental Implant
மருத்துவம்

A Chinese Robot Has Performed the World's First Automated Dental Implant

ரோபோக்கள் விரைவில் பல் மருத்துவமனை அறுவை சிகிச்சைகளுக்கென‌ பயன்பாட்டில் வர‌ உள்ளன‌. இதை நிஜமாக்கும் வகையில் உலகிலேயே முதன்முறையாக பல் உட்பொருத்துதல் அறுவை சிகிச்சை ( First Automated Dental Implant ) ஒன்றினை செய்து சீன ரோபோ சாதனை படைத்துள்ளது.

சீனாவில், ஷான்ஸி மாகாணத்தின் ஸியான் நகர ஆஸ்பத்திரியில் டென்டல் ரோபோவானது கடந்த சனிக்கிழமையன்று ஒரு பெண்மணிக்கு இரண்டு பல் உள்வைப்புகளை (செய‌ற்கை பற்களை பொருத்தியுள்ளது) நிறுவி உள்ளது. இதுவே உலகின் முதல் முழுமையான தானியக்க‌ டென்டல் இம்ப்ளான்ட் (Dental Implant) சிகிச்சை ஆகும்.


அறுவை சிகிச்சைக்கு முன்னர் திட்டமிடப்பட்ட கட்டளைகளின் தொகுப்பினை ரோபோவிற்கு (a set of pre-programmed commands fed to Dental Robot) பரிமாற‌ப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதனைப் பின்பற்றி ரோபோ பல் அறுவை சிகிச்சையைச் செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்தது.
இந்த வகை டென்டல் செயல்முறைக்குத் தேவைப்படும் தரநிலைகளுடன் 0.2-0.3 மிமீ-பிழை விளிம்புக்குள் (margin of error of 0.2-0.3 mm) செயற்கை பற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
.

பல் நிபுணர்களின் கூற்றுப்படி, ரோபோகள் பாதுகாப்பாக பல் குழி போன்ற ஒரு குறுகிய இடத்தில் அதிக துல்லியத்தன்மை மற்றும் விரைவாக‌ செயல்பட்டு செயற்கை பல் பொருத்துதல் போன்ற பல் அறுவை சிகிச்சைகளை (dental surgeries like implantations) செய்ய இயலும்.