The-MasSpec-Pen
மருத்துவம்

MasSpec Pen, pen-like device that can identify cancerous tissues 150 times faster than existing technology

வெறும் 10 வினாடிகளில் 96 சதவிகித துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடியதும், அறுவைசிகிச்சை போது புற்றுநோய் திசுக்களை உடனடியாக‌ அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு பேனா போன்ற கருவியினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த‌ பேனாப் மஸ்ஸ்பெக் பென் (MasSpec Pen) எனப் பெயரிடப்பட்ட இந்த‌ உபகரணத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதாக குணப்படுத்த முடிகிறது. ஒருசில அறிகுறிகளை ஒதுக்கி உதாசினப்படுத்தி புறந்தள்ளுவதனால் கடைசியில் தீவிரமான‌ புற்றுநோய் பாதிப்பு அபாயத்தில் கொண்டு விடுகிறது. புற்று நோயினைக் கண்டறியும் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைவிட மஸ்ஸ்பெக் பென் 150 மடங்கு வேகமாகச் செயல்படும். அறுவைசிகிச்சைகளை துல்லியமாக கண்டறிந்து விரைந்து தகவல் அளித்து , கேன்சர் பாதித்த‌ பகுதியில் எதை வெட்டி பிரிக்க‌ வேண்டும் அல்லது பாதுகாக்க வேண்டும், சிகிச்சை மேம்படுத்துதல் மற்றும் புற்றுநோய் தொடர்ச்சி வாய்ப்புகளை குறைக்கவும் உதவுகிறது.

மஸ்ஸ்பெக் பென் (MasSpec Pen) உபகரணத்தை டெக்சாஸ் பல்கலைகழக மருத்துவர்கள் (University of Texas at Austin) உருவாக்கியுள்ளனர். Science Translational Medicine எனும் அறிவியல் இதழில் வெளியான தகவலின் படி, விவரித்த ஆய்விற்காக, திசு மாதிரிகளின் மீது சோதனைகள் நடத்தப்பட்டன‌. 253 மனித புற்று நோயாளிகளிடமிருந்து மார்பக, நுரையீரல், தைராய்டு மற்றும் கருப்பை என‌ புற்று நோய் பாதித்த‌ (tissues cancerous ones) மற்றும் பாதிக்கப்படாத‌ (non-cancerous- tissue) உடல் பாகங்களிலிருந்து பெறப்பட்டன‌. மிக பாதுகாப்பான முறையில் புற்றுநோய் கட்டிகளை மஸ்ஸ்பெக் பென் (MasSpec Pen) உபயோகத்தினால் நீக்கலாம்.

MasSpec Pen எப்படி இயங்கும்

பாதிக்கப்பட்ட இடத்தில் MasSpec Pen-வை வைக்கும் போது, திசு மீது ஒரு துளி தண்ணீரை வெளியிடுகிறது, மற்றும் சிறிய மூலக்கூறுகள் தண்ணீரில் இடம்பெயர்ந்து செல்கின்றன. பின்னர் சாதனமானது, தண்ணீர் மாதிரியை ஒரு பொருண்மை நிறமாலை மானி (மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்) எனப்படும் ஒரு கருவியில் செலுத்துகிறது, இது ஆயிரக்கணக்கான மூலக்க்கூறுகளின் (detects fingerprints of thousands of molecules) கைரேகைகளை கண்டறிகிறது. இதன்மூலம் மருத்துவர்கள் மிக எளிதாக இயல்பான மற்றும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். சிறிய அளவிலான புற்றுநோய் செல்களை கூடவும் கண்டுபிடிக்க முடிவதால், மீண்டும் புற்றுநோய் செல்கள் உடலுக்குள் வளராமல் தடுக்க (பாதுகாக்க‌) முடியும்.