குழந்தை பிறக்கும் முன்னரே அப்பாவை 'சந்திக்க' வைத்த‌ விர்சுவல் ரியாலிட்டி

Father uses Virtual Technology (VR) to for visualizing his daughter before she’s born

பலரும் அறிந்த‌ விஷயம் : வி.ஆர் என்பது விர்சுவல் ரியாலிட்டியின் சுருக்கமே., விர்சுவல் ரியாலிட்டி மூலமாக இல்லாத ஒன்றையும் நிஜம்போல‌ காண்பிக்க முடியும். நாம் கண்டிராத‌ முடியாததையும் காண்பிக்க முடியும்.

வி.ஆர் நுட்பத்தின் ஆற்றல்மிக்க பயன்பாடுகள் நாம் அறிந்ததே, என்றாலும் சமுலி கென்டெல் (Samuli Cantell) பலரையும் கேள்வி எழுப்பும் விதமாக‌, பிறக்க போகின்ற‌ குழந்தையின் 3டி உருவம் காண்பிக்க‌ 4D அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் செய்து வி.ஆர் கருவி பயன்படுத்தி பார்க்க முடியும் எனும் அசாதாரண விஷயத்தினை தனது கர்ப்பிணி தோழிக்கு எடுத்துரைத்து இணங்க‌ வைத்து சாதித்துள்ளார்..


சமுலி கென்டெல் அளித்த‌ ஆச்சரியம் !

பிறக்கும் குழந்தையை கருவில் இருக்கும் போதே பார்ப்பது என்பது இயலாது. என்றாலும் ஆர்வமானது நம் குழந்தை என்ன‌ செய்கின்றது, எப்படி இருக்கும் என்கின்ற‌ ஆர்வம் பெற்றோர்களிடம் (ஈன்றேடுக்க‌ போகின்றவர்கள்) எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆக‌ அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் அது வாழ்நாள் பாக்கியமே.

இது அன்று, இன்றோ விஷயம் வேறு. வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் பிறக்கப் போகும் குழந்தையினை காண‌ வேண்டும் என‌ கருதும் பெற்றோர்கள் 4D அல்ட்ராசவுண்ட் ஸ்னிகேங் மூலம் ஸ்கேன் செய்து, விர்சுவல் ரியாலிட்டி மூலம் கண்டுகொள்ளலாம். இது ஒரு யோசனையாக‌ (ஐடியாவாக) பிறந்து, அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர்.

காலவழக்கில், 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை காணும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே (வீடியோ) குழந்தையை காண முடியும்.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததென்பது உலகிலேயே இதுதான் முதல் முறை. 3D உருவில் சித்தரிக்கப்பட்டு கருவில் வளரும் குழந்தையை வி.ஆர் கண்ணாடி மூலம் ஈன்றெடுக்கும் பெண்மணி கண்டார். மாடலிங் செய்த உரு என்றாலும், பிறக்க போகின்ற‌ குழந்தையை முன்னரே பார்ப்பது என்பது ஓர் அரிய மற்றும் இன்புறும் நிகழ்வு தானே.

எதிர்காலத்தில் கருத்தரித்த முதல் நாளிலிருந்து கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் குழந்தையுடன் வாழும் நிகழ்வுகளும் நடக்கலாம் !!!. டெக்னலஜி பாஸ். டெக்னாலஜி !!!

நாள் : 19.01.2017 திருத்தம் : 20.01.2017

புதியவை / Recent Articles