பயன்பாட்டு மென்பொருள்: மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2007, மைக்ரோசாஃப்ட் அவுட்லுக், மைக்ரோசாஃப்ட் எக்செல்

  1. 01. முதலில் ஏற்கனவே சேமித்துக்கொண்ட‌ எக்ஸ்செல் ஷீட்டினை திறக்கவும். அல்லது உங்கள் வெகுஜன மின்னஞ்சலுக்குத் தேவையான‌, தொடர்புகளை பெயர்கள், மின்னஞ்சல், முகவரிகள், மற்றும் தேவையான அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு புதிய‌ எக்செல் விரிதாளினை உருவாக்கவும். ஒவ்வொரு அணிவரிசையிலும்(Column) முதல் செல்லில் தலைப்பினை உள்ளிடவும். எக்செல் ஷீட்டினை சேமித்துக்கொள்ளவும்.
  2. 02. வேர்டை(Microsoft Word) திறக்கவும். இதனில் உங்களுடைய‌ வெகுஜன மின்னஞ்சலில் அனுப்பவேண்டிய‌ தகவலை (body message) உருவாக்கவும் (டைப் செய்யவும்).
  3. 03. இப்போது வேர்டின் மெயிலிங்ஸ் மெனுவை சொடுக்கவும் (Mailings Menu). அதில் காணப்படும் (ரிப‌னில் ‍: சப்மெனு) ஸ்டார்ட் மெயில் மெர்ஜ் (Start Mail Merge) என்பதனை கிளிக் செய்து அதன் கீழ் வரும் இமெயில் மெசேஜஸ்(Email Messages) என்பதனை கிளிக் செய்யவும். இப்போது மெயிலின் தகவலை பூர்த்தி செய்யவும். (மெசேஜினை)
  4. 04. அனுப்ப‌ வேண்டிய‌ தகவலை பூர்த்தி செய்தவுடன், மெயிலிங்ஸ் மெனுவில் (ரிப‌னில் ‍: சப்மெனு) காணப்படும் செலெக்ட் ரெசிபியென்ட்ஸ் (Select Recipients) என்பதனை கிளிக் செய்து அதன் கீழ் வரும் யூஸ் எக்சிஸ்டிங் லிஸ்ட் (Use Existing List) என்பதனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் திரையில் காண‌ப்படும் டயலாக் பாக்ஸில் நீங்கள் சேமித்துக்கொண்ட‌ எக்செல் ஷீட்டினை தெரிவு செய்யவும். தெரிவு செய்ததும் புது டயலாக் பாக்ஸ் ஒன்று தோன்றும். இதில் உங்களுக்குத் தேவையான‌ ஷீட்டினை தேர்ந்தெடுக்கவும். (இப்போது வெகுஜன மின்னஞ்சல் அனுப்பவேண்டிய‌ பெறுனர்களை வேர்ட் எக்செல் ஷீட் மூலம் எடுத்துக்கொள்ளும்.)
  5. 05. மேலும் மெயிலிங்ஸ் மெனுவில் (ரிப‌னில் ‍: சப்மெனு) காணப்படும் Highlight Merge Fields, Address Blocks, Greeting Line, insert Merge Field என்பனவற்றை கிளிக் செய்து அனுப்ப‌ வேண்டிய‌ தகவலை விரிவாக்கம், புது பெறுநர், பெறுநர் திருத்தம், பெறுநர் நீக்கம் செய்து கொள்ள‌ முடியும்.
  6. 06. இறுதியாக‌, மெயிலிங்ஸ் மெனுவில் உள்ள‌ Finish & Merge பொத்தானை கிளிக் செய்து மின்னஞ்சல்களை அனுப்பவும். (இப்போது அவுட்லுக்கின் சென்ட் ஐட்டம்சில் நீங்கள் அனுப்பிய‌ அனைத்து மின்னஞ்சல்களையும் பார்க்க‌ முடியும்.)
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.