ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி மந்திரம்

வெளியிட்ட தேதி : 29.10.2021

Shri kala bhairavar 108 Potri Lyrics

ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி மந்திரம். Shri kala bhairavar 108 Potri Lyrics Tamil Lyrics
பிரதி சனிக்கிழமைதோறும் மற்றும் அஷ்டமி காலபைரவர் வழிபாடு செய்து தேங்காய் தீபம் ஏற்றி 108 போற்றி மந்திரம் உச்சரித்து பாராயணம் செய்ய கடன் பிணி அகலும்,நோய் அகலும் ,ஆயுள் பெருகும்,பகை நீங்கும், கிரக தோஷம் விலகும்,ஞானம் பெருகும்,தொழில் முடக்கம் நீங்கும், வீட்டில் லெஷ்மி வாசம் செய்வாள்,சனிதோஷம்,கேது தோஷம்,இதய சம்பந்தமான பிணி விலகும்.தோஷம் நீங்கும்.

ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி

ஓம் பைரவனே போற்றி !

ஓம் பயநாசகனே போற்றி !
ஓம் அஷ்ட ரூபனே போற்றி !
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி !
ஓம் அயன்குருவே போற்றி !
ஓம் அறக்காவலனே போற்றி !
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி !
ஓம் அடங்காரின் அழிவே போற்றி !
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி !
ஓம் அற்புதனே போற்றி !
ஓம் ஆனந்த பைரவனே போற்றி !
ஓம் ஆலயக் காவலனே போற்றி !
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி !
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி !
ஓம் உக்ர பைரவனே போற்றி !
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி !
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி !
ஓம் உன்மத்த பைரவனே போற்றி !
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி !
ஓம் உழழித்தருள்வோனே போற்றி !
ஓம் எல்லைத்தேவனே போற்றி !
ஓம் எளிதில் இறங்குபவனே போற்றி !
ஓம் கபாலதாரியே போற்றி !
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி !
ஓம் கர்வபங்கனே போற்றி !
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி !
ஓம் கதாயுதனே போற்றி !
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி !
ஓம் கருமேக நிறனே போற்றி !
ஓம் கட்வாங்கதாரியே போற்றி !
ஓம் களவைக்குலைப்போனே போற்றி !
ஓம் கருணாமூர்த்தியே போற்றி !
ஓம் கால பைரவனே போற்றி !
ஓம் காபாலிகர் தேவனே போற்றி !
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி !
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி !
ஓம் காசிநாதனே போற்றி !
ஓம் காவல் தெய்வமே போற்றி !
ஓம் கிரோத பைரவனே போற்றி !
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி !
ஓம் சண்டபைரவனே போற்றி !
ஓம் சட்டை நாதனே போற்றி !
ஓம் சம்ஹார பைரவனே போற்றி !
ஓம் சம்ஹார காலபைரவனே போற்றி !
ஓம் சிவத்தோன்றலே போற்றி !
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி !
ஓம் சிக்ஷகனே போற்றி !
ஓம் சீகாழித்தேவனே போற்றி !
ஓம் சுடர்ச்சடையானே போற்றி !
ஓம் சுதந்திர பைரவனே போற்றி !
ஓம் சிவ அம்சனே போற்றி !
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி !
ஓம் சூலதாரியே போற்றி !
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி !
ஓம் செம்மேனியனே போற்றி !
ஓம் க்ஷேத்ர பாலனே போற்றி !
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி !
ஓம் தலங்களின் காவலனே போற்றி !
ஓம் தீதழிப்பவனே போற்றி !
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி !
ஓம் தெற்கு நோக்கனே போற்றி !
ஓம் தைரியமளிப்பவனே போற்றி !
ஓம் நவரஸரூபனே போற்றி !
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி !
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி !
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி !
ஓம் நாய் வாகனனே போற்றி !
ஓம் நாடியருள்வோனே போற்றி !
ஓம் நிமலனே போற்றி !
ஓம் நிர்வாணனே போற்றி !
ஓம் நிறைவளிப்பவனே போற்றி !
ஓம் நின்றருள்வோனே போற்றி !
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி !
ஓம் பகையழிப்பவனே போற்றி !
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி !
ஓம் பலிபீடத்துதுறைவோனே போற்றி !
ஓம் பாபபக்ஷயனே போற்றி !
ஓம் பாசம் குலைப்போனே போற்றி !
ஓம் பல பைரவனே போற்றி !
ஓம் பாம்பணியனே போற்றி !
ஓம் பிரளயகாலனே போற்றி !
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி !
ஓம் புஷண பைரவனே போற்றி !
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி !
ஓம் பெரியவனே போற்றி !
ஓம் பைராகியர் நாதனே போற்றி !
ஓம் மல நாசகனே போற்றி !
ஓம் மஹா பைரவனே போற்றி !
ஓம் மணி ஞாணனே போற்றி !
ஓம் மகர குண்டலனே போற்றி !
ஓம் மகோதரனே போற்றி !
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி !
ஓம் முக்கண்ணனே போற்றி !
ஓம் முக்தியருள்வோனே போற்றி !
ஓம் முனீஸ்வரனே போற்றி !
ஓம் மூலமூர்த்தியே போற்றி !
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி !
ஓம் யாவர்க்கும் எளியனே போற்றி !
ஓம் ருத்ரன் போற்றி !
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி !
ஓம் வடுக பைரவனே போற்றி !
ஓம் வடுகூர் நாதனே போற்றி !
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி !
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி !
ஓம் வாரணாசி வேந்தே போற்றி !
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி !
ஓம் விபீஷண பைரவனே போற்றி !
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி !

ஸ்ரீ பைரவர் வழிபாடு

தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை (Bairavar 108 potri) சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 மந்திரத்தை கீழே பார்க்கலாம். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30 – 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கேள்வி / கருத்து : What's your comment/opinion, please

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us