பாடல்:
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
முதல்வர்:
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்:
அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.
கிறிஸ்தவ சிலுவைப் பாதை பாடல்கள், பாடல்களின் வரிகள்.
உங்கள் கருத்து : comment