புல்லாய் பிறவி தர வேணும் , ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Pullai Piravi Thara Vendum - Chenjuruti Raagam - Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics
ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
பல்லவி
புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா
புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….
அனுபல்லவி
புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென
சரணம்
ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென மலரடி பெய்துன்னை
தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே
சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !
தவமிகு சுரரொடும் முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்….
உங்கள் கருத்து : comment