வீடு மனை

Gecko Switch is movable!. No longer anchored like traditional ones. Take it with you where wanted

நடமாடும் லைட் சுவிட்ச்கள். ஆம். நடமாடும் (Movable switches) , செல்லுமிடம் எல்லாம் உங்கள் கையில் எடுத்துச்செல்லக் கூடிய‌ சுவிட்ச்களின் பெயர் ஜெக்கோ சுவிட்ச் (Gecko Switch). ஒரே இடத்தில் பொருத்தப்பட்ட‌ வ‌ழக்கமான‌ லைட் சுவிட்ச்கள் போல இல்லாமல் நீங்கள் எங்கு வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம், எடுத்தும் செல்லலாம்.

ஜெக்கோ சுவிட்ச்கள் மங்கலாகவும் பிரகாசமாகவும் உங்களின் லைட்களை (Lights), குறிப்பிட்ட‌ நேரத்தில் நிறுத்தவும் அல்லது பிராகாசிக்க‌ வைக்கவும் முடியும். நீங்கள் தூங்கும் முன்னர் புத்தகம் படிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு தூங்கும் முன் லைட்டினை (Light) ஆஃப் செய்ய‌ சிறிது சோம்பலாய் இருக்கும். இந்த‌ கவலை ஜெக்கோ சுவிட்சுகள் பயன்படுத்துபவர்களுக்கு இல்லை. ஏனெனில் உங்கள் கட்டில் அருகேயோ அல்லது உங்களின் கையின் அருகிலேயோ சுவிட்ச்கள் இருப்பதனால் நீங்கள் எழும்பி லைட்டினை அணைக்க‌ வேண்டியதில்லை. படுத்துக்கொண்டே ஆஃப் செய்து கொள்ளலாம்.

ஜெக்கோ சுவிட்ச்கள் பொருத்துவதற்கு (fix switches) நீங்கள் சுவரினை உடைக்கவோ அல்லது கூடுதல் ஒயர்கள் (additional wires) தேவைப்படும் என‌ எண்ண‌ வேண்டாம். ஜெக்கோ சுவிட்ச்களை நீங்கள் தேவைப்பட்டால் சுவரினில் ஒட்டி வைத்து (stick to walls) விடலாம் அல்லது காயில் வைத்து கொள்ளலாம். ஜெக்கோ சுவிட்சிற்கு தேவையான‌ அடிப்படை சுவிட்சினை நீங்கள் தற்போது பயன்படுத்தும் சுவிட்சினை அகற்றிவிட்டு (replace existing switches) அதில் ஜெக்கோ சுவிட்சின் அடிப்படை சுவிட்சை (Base switch) பொருத்தினால் போதும். வேறு எந்த‌ பொருட்களும் தேவையில்லை. ஆக‌, ஜெக்கோ சுவிட்ச் இரண்டு பாகங்களைக் கொண்டது. 01. அடிப்படை சுவிட்ச் (Base switch). 02. நகரும் சுவிட்ச் (Movable switch).

ஜெக்கோ சுவிட்ச் LED சின்னங்களைக் (icons) கொண்டு உற்பத்தியாகின்றன‌. லைட் எரியும் போது இந்த‌ LED சின்னம் பிரகாசிக்கும். உங்கள் வீட்டின் ஒவ்வொர் மூலைக்கும் தனித்தனி சின்னங்களாக‌ எளிதில் அடையாளம் காணும்விதம் சுவிட்ச்களை வைத்துக்கொள்ளலாம். 2015ல் இந்த‌ சுவிட்ச்கள் அறிமுகமாயின‌.

Gecko Switch is movable! . No longer anchored on the wall like traditional switches. At long last you are free to place your light switch where you always wanted