வந்தான் கருப்பன் விளையாட கருப்பசாமி பாடல் வரிகள். Vandhan Karuppan Vilayaada Song on Karuppasami Tamil Lyrics
வந்தான் கருப்பன் விளையாட வாளில் ஏறி நினறாட | Vandhan Karuppan Vilayaada tamil lyrics
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நினறாட
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நினறாட (வந்தான்)
வாளும் வேலும் விளையாட
வாளில் ஏறி நின்றாட
சுக்கு மாந்தடி சுழன்றாட
வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)
காலில் சலங்கை கலகலக்க
கையில் வாளும் பளபளக்க
முறுக்கு மீசை துடி துடிக்க
வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)
பாலும் சோறும் கமகமக்க
பள்ளையம் இங்கே ஜொலி ஜொலிக்க
பிள்ளைகள் நாங்கள் கொண்டாட
வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)
சந்தனக் கருப்பன் தானாட
சங்கிலிக் கருப்பன் உடனாட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)
முன்னோடியுமே ஓடிவர
நொண்டியும் இங்கே ஆடிவார
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)
கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்
கூடி இருப்பவன் சாஸ்தாவாம்
தங்கையும் அங்கே அருகிருக்க
தரணியை காக்க வந்தவனாம் (வந்தான்)
உங்கள் கருத்து : comment