வாராரய்யா வாராரு கருப்பண்ண சுவாமி துதிப் பாடல் | Vaaraaraiyaa Vaaraaru Karuppanna Swamy thuthi padal lyrics
கருப்பர் வாரார்
வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு
அள்ளி முடிச்ச கொண்டயப்பா
அழகு மீசை துள்ளுதப்பா
வெள்ள வேட்டிப்பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போல. (வா).
ஆளுயர அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச்செருப்பாம்
கருப்பனுக்கே தனிச்சிறப்பாம். (வா).
வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்கு மாந்தடியுமுண்டு. (வா).
இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத வலிமையுண்டு. (வா).
கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு. (வா).
சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜா முல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ. (வா).
உங்கள் கருத்து : comment