ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த வீடு
தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

பொன்னும் புகழும் வாரி கொடுப்பா ஆத்தா மகிழ்வோடு

அவள் நெஞ்சமெல்லாம் அன்பு மணக்கும் குங்குமப் பூக்காடு

(ஆறுதல் தேடி)
ஆலயங்கள் கோடி உண்டு அத்தனைக்கும் பக்தர் உண்டு
சக்தியுள்ள சாமி எது கூறு என்றும் சத்தியத்த காத்து நிற்பது யாரு

நம்ம சித்தமெல்லாம் கோயில் கொண்டு நித்தம் சுக வாழ்வு தந்து
காலமெல்லாம் காத்திருப்பா பாரு அந்த ஆதி சக்தி அன்னை புகழ் பாடு

நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா
நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா
(ஆறுதல் தேடி)
நீரெடுத்து நெத்தியிலே நீயணிஞ்சா துன்பமில்லை வேண்டும் வரம் நீ கேளு
அந்த அள்ளித் தரும் அன்னை முகம் பாரு

நம்ம தாய் இருக்க ஏது குறை சஞ்சலங்கள் ஏதும் இல்லை
நெஞ்சுருக நீ பாடு பாதம் தஞ்சம் என்றே நீ நாடு

உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே
உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே
(ஆறுதல் தேடி)
ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த வீடு
தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு
தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு
உங்கள் கருத்து : comment