பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம். Paramacharya Krutha Kamakshi Stotra
பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் | Krutha Kamakshi Stotram
* மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
*ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் வரலாறு
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது. ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
உங்கள் கருத்து : comment