காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் | Kamatchi Dhukka Nivarana Ashtakam Stotram Lyrics
துக்க நிவாரண அஷ்டகம்
மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.
துக்க நிவாரண அஷ்டகம் முற்றிற்று!
'மங்கள ரூபிணி' என்பது காமாக்ஷி தேவியைப் போற்றும் பிரபலமான 'துக்க நிவாரண அஷ்டகம்' என்று அழைக்கப்படும் ஒரு தமிழ் பாமாலை ஆகும். காமாக்ஷி தேவியின் அருளைப் பெறவும், மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறவும், இந்த ஸ்லோகத்தை தினமும் வீட்டில் பாராயணம் செய்வது நல்லது. 'துக்க நிவாரணம்' என்றால் எல்லாவிதமான கவலைகளையும் நீக்கி மன அமைதியைத் தரும்.
காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம் யாருக்கு தேவைப்படும் | Kamatchi Dhukka Nivarana Ashtakam Benefits
துக்க நிவாரண அஷ்டகம் பலன்
காஞ்சியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மனை போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் உங்களை பாடாய்படுத்தும் அனைத்து துன்பங்களும் நீங்கும். வீட்டின் தரித்திர நிலை மாரி, செல்வ சேகரம் ஏற்படும். குடும்பத்தினர் நலம் பெறுவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகி செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளை அடையும்.
அதிகளவு துன்பங்கள் சமயங்களில் அவர்களின் மன உறுதியை மனக்கவலைகளை அதிகரிப்பதோடு, எதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு செயல்படமுடியாமல் செய்து வாழ்வில் மேலும் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது. இவற்றையெல்லம் போக்கும் சிறப்பான மந்திரமாக “ஸ்ரீ காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம்” இருக்கிறது.
உங்கள் கருத்து : comment