ஆபரணம்

Rhodium Plating over gold. Plating Rhodium over gold for white gold jewelry.

ரோடியம் மின்முலாம் பூச்சு என்றால் என்ன? . அது ஆபரணங்களுக்கு ஏற்ற‌தா ? நமது சருமத்திற்கு (தோல்) கேடு விளைவிக்குமா? அதை அணிய முடியுமா?. ரோடியம் முலாம் பூச்சு பற்றி புரிந்து கொள்ள, நாம் முதலில் ரோடியம் மற்றும் அதனைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை தங்கம் பற்றிய‌ பொதுவான உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.

ரோடியம் ஒரு கெட்டியான, வெள்ளி போன்ற வெண்மையான, மிகவும் பளபளப்பான‌ (ஒளியெதிர்வு மிக்கது) மாழை. ரோடியத்தை சூடேற்றினாலும் கூட பொதுவாக ஆக்ஸைடு ஆவதில்லை. (தங்கம் மற்றும் வெள்ளி கருத்துப் போவது ஆக்ஸைடு ஆவதால். வளிமண்டலத்தில் (அ) சுற்றுச்சூழலில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் (sulphur) சேர்மங்கள் (sulphur dioxide & hydrogen sulphide gases, organic vapours, etc) ஆகியவை தங்க‌ ஆபரணங்கள் செய்ய‌ பயன்படுத்தப்படும் மூல‌ உலோகங்களான‌ சில்வர் மற்றும் காப்பரருடன் வினைபுரிந்து ஆக்ஸைடுகளை உண்டுபண்ணுவதால், தங்கம் கருத்துப் போகச் செய்கின்றன‌.).

ரோடியம் முலாம் பல்வேறு காரணங்களுக்காக பூசப்படுகிறது, குறிப்பாக திருமணத்தின் போது செய்யப்படும் நகைகளில், மணப்பெண்ணின் வளையல் மற்றும் மோதிரங்கள்.

வெள்ளைத் தங்க மோதிரத்தில் பிரதிபலிக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் மற்றும் வைர நகைகளை மேலும் சிறப்பான‌ வகையில் மெருகூட்டுவதற்கும், ரோடியம் தங்கத்தின் மீது பூசப்படுகிறது. ரோடியம் ஒரு "உன்னத உலோகம்" மற்றும் செயல்திறனற்றதுமானதால், அது சிதைவில்லாமல், நீடித்து உழைக்கும், எனவேதான் ரோடியம் நகைகளின் மீது ஓரடுக்கு மின்முலாம் பூசப்படுகிறது.

நகைக்கடைகளில், பெரும்பாலும் மஞ்சள் நிறமாக‌ இருக்கும் த‌ங்க ஆபரணங்களை ப்ளீச் செய்து வெள்ளையாக‌ "வெள்ளை தங்கமாக‌" மாற்ற‌ சிறிய அளவு பல்லாடியம் அல்லது நிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இங்கே எழும் பிரச்சினை என்னவென்றால், வெள்ளை தங்கமானது பிரகாசமான வெள்ளை நிறத்தினை விட ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக‌ மாறி விடுகிறது.

ரோடியம் மின்முலாம் பூச்சு பயன்படுத்தப்படும் போது, ஆபரணங்கள் கவர்ச்சிகரமான மற்றும் பிரதிபலிப்பு செய்கின்ற‌ வெண்ணிறத் தங்கமாக‌ (வெள்ளி போன்ற‌ ஒளிர்வு) மாறுகின்றது. இந்த செயல்முறையில் ரோடியம் ஒன்று (அ) இரண்டு அல்லது அத்ற்கு மேல் மைக்ரான் தடிமனில் பூசப்படுகிறது. நகைத் தொழிலில் இந்த முறைப்பூச்சுக்கு, "ரோடியம் ஃபிளாஷிங் ( rhodium flashing ) " என‌ அறியப்படுகிறது.

வைரம் பதிக்கப்பட்ட‌ நகைகளுக்கு ரோடியம் மின்முலாம் பூச்சு கவர்ச்சிகரமான தோற்றத்தினைக் கொடுக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.