வெளியிட்ட தேதி : 19.07.2014

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யாரென்று நானறிவேன்
உம்மை யாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே என்றும்
நன்மைகள் செய்பவரே
.
1. மனிதர் தூற்றும் போது உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
.
2. தனிமை வாட்டும் போது நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
.
3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.