வெளியிட்ட தேதி : 19.07.2014

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்
.
1. நான் பாடிப் பாடி மகிழ்வேன் தினம்
ஆடிஆடித் துதிப்பேன் எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
.
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
.
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை (தினம்) நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
.
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.