வெளியிட்ட தேதி : 19.07.2014

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
.
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
.
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
.
1. ஐந்து அப்பங்களை,
ஆயிரமாய் பெருகச்செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு,
வயிராற உணவளித்தார்
.
2. பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே,
பாதுகாத்து நடத்தினாரே-----ஒரு
.
3. காடைகள் வரவழைத்தார்,
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
.
4. நீடிய ஆயுள் தந்து,
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழச் செய்வார்
.
5. கெம்பீர சத்ததோடு,
ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம் மக்களை,
தினமும் நடத்தி சென்றார்
.
6. துதிக்கும்போதெல்லாம்,
சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும்,
ஆனந்த ராகம் பிறக்கும்.


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.