வெளியிட்ட தேதி : 19.07.2014

பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்)
.
கொண்டாடுவேன்(வோம்)
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்)
.
1. அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
.
நன்றி நன்றி நன்றி-----2
.
2. துயர்நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா------என்
.
3. கல்வாரி சிலுவையினால் -----என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் (இந்த)
அடிமைக்கு கிடைத்ததையா
.
4. இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
.
5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
.
6. இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
.
7. வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
.
8. பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.