வெளியிட்ட தேதி : 10.01.2017
Yahoo Head Quarters
Software

Yahoo renamed as ‘Altaba’; will operate as an investment company

யாகூ (Yahoo) இனிமேல் இருக்கப்போவதில்லை. 1990 மற்றும் 2000ஆம் வருடங்களின் துவக்கத்தில் மிகப் பிரபலமாய் விளங்கிய‌ யாகூவின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஒரு மாபெரும் நிறுவனமான‌ யாகூ $ 4.8 பில்லியன் டாலருக்கு வெரிசோன் நிறுவனத்தால் (Verizon) வாங்கப்பட்டது என்பது தெரிந்த‌ விஷயம். இப்போது யாகூ நிறுவனம் அதன் எஞ்சிய வணிக‌ செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட‌ உருமாதிரிகளைக் (Business Models) கொண்டு ', Altaba' என‌ பெயர்மாற்றம் செய்யவுள்ளதாக‌ அறிவித்துள்ளது.

Altaba என்பது கேட்பதற்கு உண்மையில், அல்டாவிஸ்டா (Altavista) மற்றும் அலிபாபா (Alibaba), என்பதின் இணைப்பு போன்று தோன்றுகின்றது. 1990 களில் அல்டாவிஸ்டா மற்றும் அலிபாபாவும் கூஃகுள் / யாகு போன்று ஒரு தேடுபொறியாக‌ (Search Engine) செயல்பட்டு வந்தன‌. இன்று இவை தேடுபொறியாய் செயல்பாட்டில் இல்லை. என்றாலும் அதன் வணிக‌ செயல்பாடுகள் முற்றிலுமாக‌ மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன‌. அல்டாவிஸ்டா மற்றும் அலிபாபா நிறுவனங்கள் யாகூவுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவவோ சொந்தமானவையாகும்.

யாகூ, அலிபாபாவில் 15 சதவீத உடைமையும் மற்றும் யாகூ ஜப்பானில் (Yahoo Japan) 35.5 சதவீத பங்குகளையும் பராமரிக்கின்றது. Altaba ஒரு முதலீட்டு நிறுவனமாக‌ (Investment Company) செயல்பட்டு வரும். முன்னதாக யாகூவிலிருந்து இராஜினாமா செய்துகொண்ட‌ சீஇஓ வான‌ மரிசா மேயருக்கு (Marissa Mayer) சீரமைக்கப்பட்ட‌ புதிய‌ நிறுவனத்திலுள்ள‌ பதவி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.