கூஃகிள் தேடலில் டுவிட்டரின் டுவீட்களைத் இப்போது எளிதாகத் தேடமுடியும்

Google shows Tweets from Twitter now.

நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டுகொண்டிருக்கும் சமூக‌ வலைதளங்களுள் டுவிட்டரும் ஒன்றாகும். சில‌ நேரங்களில் நாம் விரும்பிப்பார்த்த‌ டுவீட்களில் ஒன்றினை தேட‌ முற்படும்போது இயலாமல் போகலாம். இதன் காரணமாக‌ கூஃகிளில் தேட‌ எண்ணுவோம். ஆனால் இது சாத்தியமா என‌ எண்ணும் பலருக்கும் இப்போதிலிருந்து கிடைக்கும் பதில். ஆம் என்பதே.ஆம் கூஃகிள் தனது தேடல் உத்தியில் டுவிட்டர் டுவீட்களையும் இப்போது சேர்த்து உள்ளது.


கடந்த‌ 2009ல் டுவிட்டர் டுவீட்களை தனது தேடல் பக்கங்களில் சேர்த்துக்கொண்டு வெளியிட்ட‌ கூஃகிள், இடையே டுவிட்டருடன் கொண்டிருந்த‌ ஒப்பந்த‌ மாற்றத்தினால் தேடல் குறியீட்டில் டுவீட்களையும் சேர்த்துக்கொள்வதை நிறுத்திவிட்டது.

இப்போது (2015) டுவிட்டர் தனது டுவீட் டேட்டாக்களை கூஃகிளின் தேடலில் சேர்த்துக்கொள்ள‌ ஒப்பந்தமுறையில் அனுமதித்துள்ளது. ஆகையால் இனிவரும் வருடங்களில் டுவிட்டரின் டுவீட்களையும் கூஃகிளில் தேடி பெற‌ முடியும் என‌ எதிர்பார்க்கலாம்

நாள் : 18.02.2015 திருத்தம் : 18.02.2015

புதியவை / Recent Articles