பணம் முதலீடு

Snapdeal and dPronto partners for sameday goods deliveryto snapdeal.com customers

ஆதாரம் dPronto இணையதளம்

Snapdeal and dPronto partners for sameday goods delivery

dPronto, a last mile delivery company tied up with online marketplace (e-commerce platform) Snapdeal.com. The partnership between this two companies is aimed at same day goods deliveries for snapdeal customers.

ஸ்னாப்டீல் (Snapdeal) நிறுவனம் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் வாங்கிய‌ பொருட்களை ஒரே நாளில் விநியோகம் செய்வதற்கான‌ சேவைகள் வழங்க, டீபுரொன்டோ (dPronto)கம்பெனியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. dPronto உள்ளூரிலிருந்து ஸ்னாப்டீல் (Snapdeal) விற்பனையாளர்கள் அல்லது நிறைவேற்று மையங்களில் இருந்து பொட்டலங்களை எடுத்துச்சென்று அதே நாளில் வாடிக்கையாளர்களுக்கு அதை வழங்கிவிடும்.

டீபுரொன்டோ (dPronto) ஏர்டெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை பதவி வகித்த‌ ராஜீவ் சர்மா என்பவரால் இந்த ஆண்டு (2016) () ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. துவக்கநிலை நிறுவனமான‌ டீபுரொன்டோ (dPronto) மின்வணிக நிறுவனங்கள் (ecommerce companies), முழு நேர தளவாட சேவை நிறுவனங்கள் ( full service logistics companies) மற்றும் உள்ளூர் இடங்களில் விநியோகச் செவைகளை வழங்கி வருகிறது.

டீபுரொன்டோ நிறுவனம் தற்போது Snapdeal தவிர, Flipkart மற்றும் ShopClues போன்ற மின்வணிக நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக‌ கூறுகிறது. dPronto இந்தியாவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக‌ ரூ .700 கோடி திரட்ட உள்ளதாக‌ பேச்சுக்கள் உள்ளன‌..