Aadhaar verification possible with Skype
Gadgets

Microsoft's VOIP calling service Skype can authenticate and verify users identity using the Aadhaar database to the government.

மைக்ரோசாப்ட் தனது VoIP அழைப்பு சேவையான‌ ஸ்கைப் (Microsoft's VOIP calling service Skype) மூலம் அரசாங்கத்திற்கு ஆதார் தரவுத்தளத்தினைப் ( Aadhaar database) பயன்படுத்தி அடையாளங்களை அங்கீகரிக்க (authenticate identity) முடியும் என‌ கூறியுள்ளது.

ஏற்கனவே விண்டோஸ் 10இல் கருவிழி அங்கீகாரத்தினை (iris authentication on Windows 10) ஆதரிக்கிறது . குறிப்பாக, அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கென‌ அணுகும் பயனர்களை அங்கீகரிக்க ஸ்கைப் இனை (Skype) பயன்படுத்த முடியும் என‌ மைக்ரோசாஃப்ட் கூறிகின்றது.

ஆதார் தரவுத்தளத்தினை ஸ்கைப் உடன் ஒருங்கிணைக்கும் (Integration of Aadhaar Db with Skype) ஒரு முன்னோடி திட்டத்தில் மைக்ரோசாப்ட் இந்த பிப்ரவரி மாதம் முதல் பணிபுரியத் தொடங்கியுள்ளது. ஆதார் பயன்படுத்தி அரசாங்க‌ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் வீடியோ அழைப்புகள் (Video Calling) செய்யும் போது பயனர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் செயலினை மைக்ரோசாஃப்ட் பரிசோதனை செய்து வருகிறது. சோதனை அங்கீகாரம் குறித்த‌ கூடுதல் விவரங்கள் வெளிவரவில்லை.

இதுபோன்று வோடபோன் (Vodafone), கொல்கத்தாவில் தன‌து புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளை (new prepaid and post-paid connections) வழங்க‌ ஆதார் சரிபார்ப்பினை பயன்படுத்த ஒரு புதிய பைலட் திட்டத்தினை துவங்கியது.

அண்மையில், ஏர்டெல் (Airtel), வோடபோன் (Vodafone) மற்றும் ஐடியா (idea) உள்ளிட்ட முக்கிய டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் (telecom companies), தொலைத் தொடர்புத் துறை (Department of Telecom) வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கு ஆதார் சார்ந்த eKYC சரிபார்ப்பை பயன்படுத்த துவங்கியுள்ளன‌ என்பது குறிப்பிடத்தக்கது.