புகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்
ஆதாரம் | மைக்ரோசாஃப்ட் பிராஜெக்ட் இணையதளம் |
பிராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற தலைப்பின் கீழ் உலகின் முண்ணனி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் பயனர் நோக்கோடு, தனிமனித சுபாவம் மற்றும் உணர்ச்சிகளை யூகித்துக் கூறுவதற்கான பயன்பாட்டு நிரல் இடைமுகத்தினை (API) வடிவமைத்துள்ளது.
மைக்ரோசாஃப்டின் இந்த இடைமுகத்தில், புகைப்படத்தினை யூகித்து வயது கூறும் கருவி, இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) அல்கோரிதம்கள், பதிவேற்றிய புகைப்படம் அடிப்படையில் உணர்வுகளை யூகித்துக் கூறும் ஒரு பயன்பாடு என அங்கம் கொண்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த கருவிகள் பிரிட்டனில் நடைபெற்ற "Microsoft’s Future Decoded" மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த மென்பொருள், ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தினை ( குறைந்தது 36 சதுர பிக்சல்கள் மற்றும் 4MB யை விட சிறிய அளவு கொண்ட) ஆய்வு செய்து ,முகத்தினை அடையாளம் கண்டு உணர்வுகளை நிர்ணயித்து ஒவ்வொரு வகையான உணர்வுகளுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கும். உயர்ந்த மதிப்பெண் அல்லது யூகம், முதலில் காண்பிக்கப்படும்.