வெளியிட்ட தேதி : 19.08.2017

Preview : Microsoft releases updated Skype Desktop app

பல்வேறு சாட்டிங் (இணையத் தொடர்பாடல்) அப்பிளிக்கேஷன்கள் மத்தியில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனுக்கு என‌ தனியிடம் மற்றும் வரவேற்பு காணப்படுகின்றது.

இந்த அந்தஸ்தினை தக்க வைப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் புதுப்புது வசதிகளை குறித்த கால இடைவெளிகளில் அறிமுகம் செய்து வருகின்றது. மைக்ரோசாப்ட்டின் ஸ்கைப் டெஸ்க்டாப் பயன்பாடு இப்போது மறுவடிவம் (Skype’s desktop app redesign ) பெற்றுள்ளது. தற்ப்போது முன்னோட்ட பார்வையிலுள்ள‌ ஸ்கைப் (Skype Preview), விண்டோஸ் மற்றும் மேக் இன் பழைய பதிப்புகளில் வேலை செய்கிறது. ஆனால் சமீபத்திய விண்டோஸ் 10 வெளியீடுக்கென‌ உருவாக்கப்படவில்லை.

புது முன்னோட்டத்தில் சாட் வசதி முக்கியத்துவம்பெற்று மேம்படுத்தப்பட்டுள்ளது; மேலும் நிகழ்நேர திரை மற்றும் புகைப்பட பகிர்வுகளும் புது வடிவம் பெற்றுள்ளன‌. புதிதாய் @mentions அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெசேஜிங் எதிர்வினை (message reactions) மற்றும் ஒரு புதிய அறிவிப்பு பலகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; இணைப்புகள், ஆவணங்கள், மற்றும் பகிரப்பட்ட உள்ளடக்கத்தை கண்டறிய புதிய சாட் மீடியா கேலரியும் (new chat media gallery) புதிதாய் உள்ளன‌. மேலும் குழு அழப்பிற்கு (group calls) இன்னும் தனிப்பயனாக்கம் சேர்க்கிறது.


Microsoft Skype Desktop app Screen

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.