LYCOS home screen
Gadgets

Yahoo no more. But its precedent LYCOS is active now

யாஃகூவின் தடுமாற்றங்களுக்கு பின்னால் பல‌ காரணங்கள் இருந்தாலும், அதனால் கூஃகுளின் தேடல் பொறியுடன் போட்டிபோட‌ முடியாததே முதற்காரணமாக‌ கூறப்படுகின்றது. கூகுளின் தேடல் தயாரிப்பானது மிகச் சிறப்பானதும், தேடுபவர்களுக்கு பொருத்தமான‌ முடிவுகளை, பயன்படுமாறு காட்டி மிகப் பிரபலமடைந்துள்ளது.

இன்றைய நுட்பத்திற்கு ஏற்ப‌ யாஃகூவால் நிலைத்து நிற்க‌ இயலவில்லை. ஆகையால் $4.8 பில்லியனுக்கு வெரிசான் நிறுவனத்தால் வாங்க‌ முடிந்தது.

லைகோஸ் மற்றும் யாஃகூ

1990களில் லைக்கோஸ் (LYCOS), தேடலில் முன்னோடியாக‌ (pioneer in search) திகழ்ந்தது. என்றாலும் லைக்கோஸ்ஸால் கூஃகுள் (Google) மற்றும் யாஃகூ (Yahoo) போன்று பிரபலமடைய (Popularity) இயலவில்லை. ஆனால் இன்று யாஃகூ காணாமல் போனாலும் லைக்கோஸ் (LYCOS) தன்னை மாற்றிக் கொண்டு நிலைத்து நிற்கின்றதென்பது சிந்தித்து பார்க்க‌ வேண்டிய‌ விஷயமே.

கடந்த‌ காலத்தினை நினைவுபடுத்தி பார்க்கையில், லைக்கோஸ் கூஃகுள் கண்ட‌ அதே வளர்ச்சியினையும் கண்டிருந்தது. அது தேடலோடு மட்டும் இல்லாமல் கேமிங் (Gaming), ஹோஸ்டிங் (Web Hosting), பிளாகிங் (Blogging), செய்திகள் என‌ பல‌ அம்சங்களை பெற்றிருந்தது.

லைக்கோஸ், இன்றைய‌ தோற்றம்

இன்றோ முற்றிலுமாக‌ ஒரு தேடல் பொறியாக‌ (Search engine) லைக்கோஸ் விளங்கி வருகின்றது. லைக்கோஸ் ஆல் உருவாக்கம் செய்யப்பட்ட‌ உருவாக்கங்கள் ஆன‌, Whowhere, LYCOS Chat, Tripod ஆகியவை இன்னமும் பயன்படுத்தக்கூடிய‌ நிலையில் உள்ளன‌.

மிகவும் விசித்திரமானது என்னவென்றால் லைக்கோஸ் அணியக் கூடிய‌ விளையாட்டு கருவிகளிலும் (wearables games) நுழைந்ததே. 2015ல் ஒரு fitness Tracker மற்றும் NFC ஸ்மார்ட் மோதிரம் ஆகியவற்றினை அறிமுகம் செய்தது. அது பற்றிய‌ வீடியோ கீழே. நினைத்தபடி விற்பனை ஆகாவிட்டாலும் , அது தொடர்புடைய‌ மொபைல் ஆப்கள் 1000லிருந்து 5000 டவுண்லோட்ஸ்கள் மட்டுமே பெற்றாலும் தன்னை நவீன‌ உலகிற்கு ஏற்றாற்போல‌ மாற்றிக்கொண்டதே லைக்கொஸின் சிறப்பு.