Gears

Google Map updated with new features and version upgrade

கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் (Google Map service) சேவை உலகளவில் பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது பகுதியாக கூகுள் தனது மேப் பயன்பாட்டின் (Google Map App) புதிய பதிப்பினை (version upgraded) அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய பதிப்பினில் சில புதிய அம்சங்கள் (new features) சேர்க்க‌ப்பட்டுள்ளன.

புது வசதிகளில் பிரதானமாக WiFi Only Mode வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த‌ வசதியினால் மொபைல் சேவை வழங்குனர் ஊடாக டேட்டா கட்டணங்கள் (data charges) வீண் விரயமாவதை தடுக்கப்படும். இது தவிர போக்குவரத்து தொடர்பாக ஏற்படும் (traffic) கால‌ தாமதங்களுக்கான காரணங்களையும் உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளும் வசதியும் சேர்த்துக்கொள்ள‌ப்பட்டுள்ளது.

சாலை வரைபடங்கள் தெளிவான தோற்றத்தை அளிப்பதற்காக‌ பழைய‌ மேப்பின் சாலை கோடுகள் அகற்றப்பட்டதைப் போன்று சில‌ மாற்றங்களை புதிய‌ பதிப்பு கொண்டுள்ளது. இதனால் எளிதாக போக்குவரத்து மற்றும் போக்குவரத்து சம்பந்தமான‌ பயனுள்ள தகவல்களை மேப் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் புதிய வண்ணங்களில் (new color schemes) தலங்களை கண்டறிய‌ ஏதுவாய் எல்லைக்குறியை வண்ணமயமாக‌ புதுவிதமாய் மாற்றியுள்ளது.

Google has a new version for Google Map App. Google updated its Map app with few changes and UX design. Google has removed a few elements like road outlines to give Maps a cleaner look. The new design also makes it easier to see helpful information like traffic and transit.