கல்வி

Google launches IT courses and scholarships in India

ஆதாரம் உடாசிட்டி இணையதளம்

கூகிள், Udacity மற்றும் டாட்டா டிரஸ்ட் உடன் இணைந்து இந்தியாவில் ஐ.டி படிப்புகள் மற்றும் ஸ்காலர்ஷிப்களை (கல்வி உதவித்தொகை) தொடங்குகிறது.

இந்தியாவில் பயன்பாடுகள் சம்பந்தமான‌ [கைபேசி (மொபைல் ஆப்கள்) / பிற‌ ஸ்மார்ட் கருவிகள்] ஐ.டி வளத்தினைப் பெருக்கும் நோக்கோடு கூஃகிள் அண்ட்ராய்டு நேனோடிகிரீஸ் (Android Nanodegrees) எனும் ஐ.டி. பட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த‌ பட்டங்களை கூஃகிள் இணையதளம் வாயிலாக‌ (ஆன்லைன்) கல்வி வழங்கும் உடாசிட்டி (Udacity) மற்றும் டாட்டா அறக்கட்டளை (TATA Trust) உடன் இணைந்து வழங்குகிறது.

இந்த‌ பட்டங்களின் படிப்புகாலம் 6 முதல் 9 மாதங்களாகும் மற்றும் பாடநெறிக் கட்டணம் (Degree Fee) $148 = ரூ. 9754.30 ஆகும். எனினும் நிறுவனமான‌து 50% கல்விக் கட்டணத்தினை, மாணவர் வெற்றிகரமாகப் பட்டத்தினை நிறைவு செய்துவிட்டால் (successful completion) திரும்பப்பெறலாம் என்கிறது. இந்த‌ படிப்பு முழுமையாக‌ இணையதளம் வாயிலாக‌ (entirely online) மட்டிமே அளிக்கப்படும்.