ஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே !

Flipkart takes certain items to be bought through mobile app only.

ஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு

ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை மொபைல் ஆப்களுக்கு மட்டுமே என‌ தற்போது ஒதுக்கியுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முதல் முழுமையான‌ ஆப் / கைபேசி (மொபைல்) பயன்பாடாக‌ மாற‌ உள்ளது. மிந்திரா இணையதளத்தினை முன்னதாக‌ கையகப்படுத்தி பின்னர் முழுமையான‌ ஆப் / கைபேசி பயன்பாடாக‌ மாற்றிய‌ ஃபிளிப்கார்ட் (Flipkart) தனது முதன்மை வியாபார‌ இணையதளத்தினையும் முழுமையான‌ கைபேசி பயன்பாடாக‌ மாற்றவுள்ளது என‌ என்டி டிவி அறிக்கை கூறுகிறது.

இதனை தெளிவுப்படுத்தும் விதமாக‌ ஆப்களில் (மொபைல் பயன்பாடு) மட்டிமே ஃபிளிப்கார்ட் (Flipkart) என‌ உறுதி செய்யும் விதமாக‌ ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் "இந்தப் பக்கத்தில் இருக்கும் சில பொருட்கள் மொபைல் பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கின்றன" என்று குறிப்பிட்டு செய்தியை காட்டுகிறது.

நாள் : 16.08.2015 திருத்தம் : 04.09.2015

புதியவை / Recent Articles