ஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது

Gears

Flipkart relaunches mobile website

ஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு

ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை மொபைல் ஆப்களுக்கு மட்டுமே என‌ ஒதுக்கி ஒரு முழுமையான‌ ஆப் / கைபேசி (மொபைல்) பயன்பாடு வழியாக‌ தனது சேவையினை வழங்க‌ திட்ட‌மிட்டிருந்தது. மிந்திரா இணையதளத்தினை முன்னதாக‌ கையகப்படுத்தி பின்னர் அதனை முழுமையான‌ ஆப் / கைபேசி பயன்பாடாக‌ மாற்றியது ஃபிளிப்கார்ட் (Flipkart).

இதற்காக‌ தனது மொபைல் இணையதளச் சேவையினையும் கிட்டத்தட்ட‌ ஒரு வருட‌ காலமாக‌ நிறுத்தி வைத்திருந்தது. ஃப்ளிப்கார்ட் அதன் 95% இணையதள‌ உபயோகம் மற்றும் 70% காசு பரரிமாற்றமும் மொபைல் வழியாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் மொபைல் பயன்பாட்டினை வெளியிட்டதால் போட்டியில் முந்திக்கொண்டாலும், என்னதான் ஸ்மார்ட்ஃபோன்கள் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டாலும், முட்டுக்கட்டைகளாய் ‍- வசதி குறைவான‌ கைபேசிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட‌ சேமிப்புத்திறன் மற்றும் மொபைல் இணைய (mobile internet) ஊடுருவல் என‌ இந்தியாவில் கைபேசி (மொபைல்) பயன்பாட்டினை மட்டுமே கொண்டு வியாபாரத்தினை மேற்கொள்ளுவது சாதரணமானதல்ல‌.

ஆகையால் ஃப்ளிப்கார்ட் தனது மொபைல் இணையதளத்தினை ஒரு புதிய வலைசார்ந்த‌ பயன்பாடாக‌ மொபைல் ஃபோன்களுக்காக‌ திரும்பவும் மறுவடிவமைத்திருக்கிறது. ஆகையால் நீங்கள் கைபேசி பயன்பாட்டினை (app) நிறுவாமல் மீண்டும் முன்போல‌ ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.

நாள் : 12.11.2015 திருத்தம் : 12.11.2015