மெசஞ்சர் பயனர்கள் இப்போது தொலைபேசி எண் மட்டுமே கொண்டு பதிவு செய்ய முடியும்

Gears

Now You can register for Messenger account with just a phone number

பேஸ்புக்கின் மெசஞ்சர் பயனர்கள் இப்போது தங்களின் கைபேசி எண் மட்டுமே உபயோகப்படுத்தி புது மெசஞ்சர் கணக்கினைத் துவங்க‌ முடியும். மெசஞ்சர் கணக்கினைத் துவங்க‌ ஃபேஸ்புக் கணக்குத் தேவையில்லை. இத்தகவலினை ஃபேஸ்புக் தனது வலைப்பதிவில், இந்த‌ அம்சம் தற்போது கனடா, அமெரிக்கா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய‌ நாடுகளில் முதற்கட்டமாக‌ செயல்படுத்தப்பட்டது என்றும் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் இவ்வசதி எப்போது வருமென‌ எந்த‌ தகவலும் வெளியாகவில்லை.

இந்த‌ புதிய மேம்படுத்தலினால், பயனர்கள் புதிய‌ மெசஞ்சர் கணக்கினைத் மொபைல் ஆப்பில் (Mobile App) துவங்கும் போது அவர்களிடம் ஒரு விருப்பத் தேர்வினை கேட்கின்றது. "நாட் ஆன் பேஸ்புக்? (Not on Facebook?)", என் வினவுகின்றது. பின்னர் பயனர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் புகைப்படத்துடன் புது மெசஞ்சர் கணக்கினைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

நாள் : 28.06.2015 திருத்தம் : 28.06.2015