Facebook Messenger Crosses 1 billion users

Facebook owned messenger chat app has reached and crossed over 1 billion active members and has joined 1 billion club with Facebook's Whatsapp, Google's Youtube, Gmail and Map.

பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) 100 கோடி (1 பில்லியன் / i billion users) பயனர்களைக் கடந்ததுள்ளது. ஆகஸ்ட் 2011 இல் துவங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள‌ நிலையில், 6 மாதங்களுக்கு முன்பாக‌ 90 கோடி பயனர்களை எட்டிய‌ மெசஞ்சர் தற்போது 100 கோடி பயனாளர்களைக் கொண்டு 1 பில்லியன் கிளப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்ன்னர் ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (Whatsapp), மற்றும் கூஃகிளுக்குச் சொந்தமான‌ யூடியூப் (Google YouTube), ஜிமெயில் ( Gmail) மற்றும் கூஃகிள் மேப்ஸ் ( Google Maps) போன்ற‌ பயன்பாடுகள் 100 கோடி பயனாளர்கள் மைல்கல்லைத்த் தாண்டி 1 பில்லியன் கிளப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2012 ல், பேஸ்புக் (facebook) தனது தனித்தியங்கும் மெசஞ்சர் பயன்பாட்டினை சீரமைத்து பயனர்களிடம் சுயக்கணக்கினைக்கொண்டும், பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு புது கணக்கினைத் துவங்கக் கேட்டுக்கொண்டு பயனர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கத்துவங்கியது. இந்த‌ சமயத்தில்தான் ஃபேஸ்புக் 100 கோடி மைல் கல்லை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் வாட்ஸ் அப்பின் மெசஞ்சர் (Whatsapp Messenger App) பயன்பாடு பிரபாலமாகத் துவங்கிய‌ நேரம். இதுவே ஃபேஸ்புக்கினை தனக்கென்று மெசஞ்சர் பயன்பாடு ஒன்றினை உருவாக்கத் தூண்டியது.

இன்று போட்டியாக‌ விளங்கிய‌ வாட்ஸ் அப்பினையும் பேஸ்புக் வாங்கிக்கொண்டது.