5G network
Technology

BSNL To Sign Deal With Nokia On IoT, 5G At MWC 2017

BSNL நிறுவனம் நோக்கியாவுடன் ஒன்றுசேர்ந்து 5G தொழில்நுட்பம் மற்றும் இணைய‌ உலக‌ தொழில்நுட்ப‌ இணைப்புக்களுக்கான‌ (Internet Of Things) சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்ய‌ உள்ளது (BSNL NOKIA Deal). இந்த ஒப்பந்தம் பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் (Barcelona Mobile World Congress) கையெழுத்திடப்பட‌ உள்ளது (பிப் 27 - மார்ச் 2, 2017).

"பிஎஸ்என்எல், பார்சிலோனா மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் 5G மற்றும் இணைய‌ உலக‌ பயன்பாடுகளுக்காக‌ அறிவு பகிர்வுகொள்ள‌ நோக்கியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்" என‌ BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா ட்வீட் செய்துள்ளார்.

இது ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கும், எதிர்கால 5G நெட்வொர்க்குகளுக்கு பாலமாக இருக்கும் எனவும் BSNL தலைவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் சார்பாக‌ ஸ்ரீவத்சவா மற்றும் நோக்கியா தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சூரி ஆகியோரும் பார்சிலோனாவில் பிரதிநிதித்துவம் செய்துள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) போது 5G தொழில்நுட்பம் சார்ந்த செயல் விளக்கம், அதிவேக டேட்டா பயன்பாடு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் பயன்பாடுகளை இணைந்து வழங்குவது குறித்த‌ நிகழ்வுகள் அடங்கும்.