Brave Browser
Gadgets

Brave Browser introduces SpeedReader to boost user experience

குரோம், ஃப‌யர் ஃபாக்ஸ் போன்ற பிரபலமான‌ இணைய உலாவிகளின் (பிரவுசர்) மத்தியில் Brave எனப்படும் உலாவியும் இருக்கின்றது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Brave வெப் பிரவுசரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 மடங்கு முதல் 27 மடங்கு வரை வேகமாக இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்து பார்வையிடுவதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
எனவே அதன் முக்கிய அம்சங்களாக‌ , அதிகரித்த செயல்திறன், சிறந்த தனியுரிமை நன்மைகள் , பக்கம் ஒழுங்கமைவு முன் மேற்கொள்ளப்படும் தரவு தேர்வுமுறை என்பன‌ அடங்கும்.
இவ் வசதியானது SpeedReader என அழைக்கப்படுகின்றது.

SpeedReader வசதி ?

புதிதாய் அறிமுகமான‌ SpeedReader வசதி, இணைய‌ பக்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதால், வேகமாக‌ தரவுகளை டவுன்லோட் செய்கின்றது. இதன் விளைவாக வலைப்பக்கத்தினை விரைவில் படிப்பது மற்றும் இணையதளத்திற்குச் செல்வதை எளிதானதாக்கி மிக‌ வேகமான‌ உலாவியாய் விளங்குகின்றது.

மேலும் SpeedReader உள்ளடக்கியதால், 2.4 மடங்கு நினைவகம் குறைவாக பயன்படுத்தப்படுவதுடன், இணைய வலையமைப்பு வேகம் 84 சதவீதம் (bandwidth savings) சேமிக்கப் படுகின்றதமையால் இணையத்தளங்களை சிறப்பாக வேகமாக‌ பார்வையிட முடியும். மேலும் இதப்பற்றி தெரிந்துகொள்ள‌ https://brave.com/speed-reader/ பக்கத்திற்குச் செல்லுங்கள்.

உலகெங்கிலும், தற்சமயம் பிரேவ் உலாவியை (Brave Browser) சுமார் 5 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள SpeedReader வசதியின் பின்னர் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.