இன்டர்நெட் தவறாக பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் சாட்டிங் செய்யும்போது நெறிமுறையில்லாமல் நடந்துகொண்டதற்காக சவுதி இளைஞனை (சிறுவன்)அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் (Saudi Arabia), சமூக வலைத்தளங்களை (Social Networking websites)பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது நிமித்தம் சவுதி அரசு இதுபோன்று பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவைச் சார்ந்தவரும் அங்கு குடியிருப்பவருமான அபு சின் என்ற சிறுவன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் (California) குடியிருக்கும் 21 வயதான கிறிஸ்டீனா என்ற இளைஞியுடன் நேரலையில் சேட் செய்துள்ளார்.
இருவரும் சாட்டிங் செய்த விதம் எதிர்மறையான எண்ணத்தை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் நடந்துகொண்டுள்ளனர் என சவுதி பொலீசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் சுவாரசியம் என்னவெனில் கிறிஸ்டீனா பேசும் ஆங்கிலம் (அமெரிக்க மொழி) அபு சின்னுக்கு புரியவில்லை. அபு சின்னுக்கு அரேபிய மொழி மட்டுமே பேசத்தெரியும் என்பது விசித்திரமாய் உள்ளது. மொழியறியாது சாட்டிங் ??.
ஆனால் இருவரும் தங்களது மொழி மறந்து சுவாரசியமாக பேசிய வீடியோ இணையத்தில் (யூடியூப் மற்றும் பல வீடியோ பகிர்வு தளங்கள்) வெளியாகி, அது வைரலாக பரவி, பல ஆயிரம் பேர் பார்த்து தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்து சவுதி போலீசார் அபுவை கைது செய்துள்ளது. இவர்கள் சேட் செய்த வீடியோவைக் கீழேக் காணலாம்.