சமீபத்தில் (செப்.4.2013ல்) கூஃகிள் தனது 15வது பிறந்த‌ நாளைக் கொண்டாடியது. இப்பிறந்த‌ நாளில் ஆச்சரியமூட்டும் வகையில், கூகிள் தனது தேடல் பொறியில், "1998 ஆம் ஆண்டு கூகிள்" என‌ தட்டச்சு செய்தால், இணையதளம் 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பார்க்கப்பட்டது என‌ காண்பித்து தனது பார்வையாளர்களை ஈர்த்தது.

நீங்களும் முயற்சி செய்யலாமே. அப்படியானால் கூஃகிள் இணையதளத்தின் முதற் பக்கத்திற்கு செல்லுங்கள். " Google in 1998 " என‌ தட்டச்சு செய்யவும்.(TYPE " Google in 1998 " in the Search box.)

எனினும் நீங்கள் அப்பக்கத்தினை மட்டுமே காண‌ இயலும். "1998 ஆம் ஆண்டு கூகிள்" பக்கத்தில் நீங்கள் மீண்டும் தேடினால் தற்போதய‌ தோற்றம் மற்றும் தேடல் நுட்பத்துடன் தான் முடிவுகளைக் காண‌ முடியும்.

1998 தோற்றத்தில் நீங்கள் தேடல் சொல்லாக‌ " Google" என்ற‌ வார்த்தைக்கு உண்மையான தேடல் முடிவுகளை பார்க்கலாம். அப்போதய‌, தேடல் நுட்பம் " கூஃகிள்" என்ற‌ வார்த்தைக்கு 234.000 முடிவுகளை மட்டுமே தந்துள்ளது. ஆனால் இன்றைய‌ கூகிள் 9.450.000.000 முடிவுகளை அளித்திருக்கிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.