வீடு மனை

Special little house, made out of cardboard suits all your needs.

ஆதாரம் wikkelhouse இணையதளம்

Look this special house made out of Cardboard

Netherlands Wikkelhouse manufactures this cardboard building structures as home, home office, guest house etc. The house is fabricated from corrugated cardboard pieces that are stacked in series together. You could also integrate a kitchen or a bathroom in this cardboardhouse.

The house is manufactured to withstand for a lifespan of 50 years. The outer layer is covered with a waterproof membrane to protect itself from slogging. The interiors are fabricated with a thick wooden layer for long life.
Cick here to know more about Wikkel house

Images: Wikkelhouse

வழக்கமான‌ வீடு கான்கிரீட், செங்கல் அல்லது மரத்தினால் கட்டப்படும். ஆனால் இந்த‌ வீடு அட்டையிலிருந்து (Corrugated Cardboard) கட்டப்படுகிறது. நம்பமுடிகிறதா ? இந்த‌ கட்டிடம் ஒரு ரொட்டியின் துண்டுகளைப் (Slices of a Bread Loaf) போல‌ பல‌ அட்டை துண்டுகளை ஒன்றோடொன்று அடுக்கி வைத்து கட்டப்பட்டது.

இந்த‌ அட்டை வீட்டின் வெளி மேற்பரப்பில், நீர் ஊறாமல் இருக்க‌ நீர்ப்புகாத‌ சவ்வினால் அமைக்கப்படுகிறது. வீட்டின் உட்பகுதி (Interior) அதிக‌ காலம் நீடிப்பதற்காக‌ தடிமனான‌ மர‌ அடுக்கினைக் கொண்டு கட்டப்பட்ட‌து.

ஒவ்வொரு கட்டுமான‌ பிரிவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட‌ அச்சினால் (mould) உருவாக்காப்படுகிறது. வீட்டின் இறுதி வடிவானது சுமார் 500 கிலோ இடை கொண்டது. மேலும் இதில் நீங்கள் தேவைப்பட்டால் ஒரு சமையலறை அல்லது குளியலறை பிரிவினை உள்ளடக்கி கட்ட‌ முடியும்.

இந்த‌ வீடு அஸ்திவாரங்களில் (Basement) கட்டப்படுவதற்கு மாறாக‌ அடிச்சட்டத்தின் (Chasis) மீது கட்டப்பட்டது. எனவே தேவை என்றால் வீடினை நகர்த்த முடியும். சுமார் 50 ஆண்டுகள் நீடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் (Netherland) சார்ந்த‌ நிறுவனமான‌ Wikkelhouse இவ்வகை புதுமையான‌, இயற்கைப் பொருட்களாலான‌ வீடுகளை தயாரிக்கின்றது.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.