வீடு மனை

Essential Tips when you intend to buy and invest for home inverter


நீங்கள் உங்களது வீட்டில் இன்வெர்டர் அமைக்க‌ எண்ணம் கொண்டவரா?

இன்வேர்டர் (Inverter) வாங்குவதற்கு ஒரு விற்பனையாளரை அணுகி இன்வேர்டர் பற்றிய‌ விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ளும் முன்னர் தரமான‌ பாட்டரிக்களை தயாரிக்கும் நிறுவனங்களை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான‌ விற்பனையாள‌ர்கள் எக்ஸைட் பாட்டரிக்களை (EXIDE Batteries) பரிந்துரை செய்வர். நல்ல‌ தரமான‌ பொருட்களை அளிக்கும் பிராண்ட்கள் மக்களின் மன‌தில் காலகாலமாக‌ நிலைத்து நிற்குமென்பதில் ஐயமில்லை.

பாட்டரிக்களை (battery) தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் முதலில் பாட்டரி மாடல்களை (Battery Models) விற்பனையாளர் தனது சிற்றேட்டில் (Brochure) காண்பித்து விலை கூறுவார்.

"கவனம் செலுத்த‌ வேண்டியது மாடல் மற்றும் மாடல் எண். ஏனெனில் மாடல் எண்தான் பாட்டரிக்கான‌ திறனை எடுத்துரைக்கும். ஆகவே நீங்கள் விற்பனையாளரிடம் மாடல் எண்ணை கேட்டு தெரிந்துகொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்".

மாடல் எண்ணுக்கான‌ உதாரண‌ம் : EXIDE INVATUBULAR IT500 SUPER , இதில் "INVATUBULAR" என்பது மாடல்; "IT500" என்பது மாடல் எண்