வீடு மனை

Philips hue Personal Wireless Lighting

ஆதாரம் பிலிஃப்ஸின் இணையதளம்

பிலிஃப்ஸ் (Philips) ஹியூ பல்புகள் வெள்ளை ஒளியின் ஒவ்வொரு நிழலையும் அடக்கியது. நிறமாலையில் காண‌ப்படும் அனைத்து வண்ணங்களிலும் ஒளிரக்கூடுயது. ஹியூ பல்புகள் நிறைய அம்சங்களைக் கொண்டது.

உங்களின் வசிப்பறையிலேயே ஒரு சூரியன் மறையும் (sunset) நேர‌ நிறத்தினை வேண்டுமானால் அமைத்துக்கொள்ள‌ முடியும் அல்லது நீங்கள் படிக்க வசதியாக‌ அமைதியான‌ நிறத்தினைக் கொண்டு ஒரு நல்ல இடம் உருவாக்க முடியும். ஹியூ பல்புகளைக் கொண்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஹியூ பல்புகள் உங்களுக்கு முழுமையாக‌ கட்டுப்படுத்தப்படும் ஒளிகளை அளிக்கும்.

ஹியூ பல்புகள் எப்படி வேலை செய்கின்றன‌ ?

ஹியூ பல்புகளைப் பயன்படுத்த‌ உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு பாலம் போன்ற‌ அமைப்பு மற்றும் ஹியூ பயன்பாடு (Philips Hue App) . இந்த‌ பிரிட்ஜ் (Bridge) கருவியானது (பாலம்) உங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள் (அ) இதர‌ ஸ்மார்ட் கருவிக்கும் (Smart Devices) ஹியூ பல்புகளுக்கும் இடையேயானத் தொடர்புகளைக் கொண்டிருக்கும். நீங்கள் புதிதாய் வாங்கும் ஹியூ பல்புகள் ஸ்டார்டர் கிட்களில் (Starter kit) இது கண்டிப்பாக‌ காண‌ப்படும். வை‍ஃபை (Wi-Fi) இணைப்புடன் இந்த‌ பிரிட்ஜ் (பாலம்) கருவியைக் கொண்டு 50 ஹியூ தயாரிப்புகளை (50 Hue products ) இணைக்க‌ முடியும்.

ஸ்மார்ட் கருவிகளில் ( Smart Devices) நிறுவப்பட்ட‌ பயன்பாடுகளைக் (Philips Hue App) கொண்டு ஹியூ பல்புகளை (Hue Bulbs) உங்களின் தேவைக்கேற்ப‌ கட்டுபடுத்த முடியும்.

வகைகள்

Hue Lux, Hue Go, Hue Beyond, Hue Phoenix, hue tap, Hue Bloom, Hue Iris, LightStrips என‌ பல‌ வடிவங்களில் பெற்றுக்கொள்ள‌ முடியும்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.