LED விளக்குகள்
கிட்டத்தட்ட 2010ஆம் ஆண்டுவரை பெரும்பாலான மக்கள் குண்டு பல்புகளைத்தான் உபயோகப்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இம்மின்சார விளக்குகள் வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ (Light Emitting Diode) விளக்குகள் அறிமுகம் ஆயின. LEDக்கள் காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
LED விளக்குகள் குண்டு பல்புகளை விட விலையில் குரைவானதாகும். இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது எனவும் கூறப்படுகிறது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் குண்டு பல்புகள் விற்கப்பட்டாலும், 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல என்றும் எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம் என ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.