வெளியிட்ட தேதி : 19.04.2013
வீடு மனை

Inverter Air conditioners, NOn-inveter Air Conditioners

இன்வெர்டர் அல்லாத ஏர் கண்டிஷனர்கள் மத்தியில், இன்வெர்டர் ஏர் கண்டிஷனர்கள், சந்தையில் புதியதாக‌ உள்ளது. ஒன்று மற்றும் ஐந்து நட்சத்திர‌ ஆற்றல் திறன் மதிப்பீடு கொண்ட‌ ஏர் கண்டிஷனர்கள் போல், இன்வெர்டர் ஏர் கண்டிஷனர்கள் 'இன்வெர்ட்டர்' தரப்படுத்தல் என‌ தனி மதிப்பீடு கொண்டுள்ளது.

அப்படியெனில், ஒரு இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர் மற்ற ஏர் கண்டிஷனர்களை விட எப்படி சிறப்பானது?

இன்வெர்டர் ஏர் கண்டிஷனரில், ஒரு இன்வெர்டர் மூலம் கம்ப்ரசர் மோட்டாரின் வேகம் கட்டுப்படுத்தபடுகிறது. இந்த‌ இன்வெர்டர், ஏசியின் வெப்பநிலை படி வேகத்தினை மாற்ற அனுமதிக்கிறது.
இது மின்சார பயன்பாட்டினை (நுகர்வு) குறைப்பதற்கு உதவுகிறது. இதுவேதான் இன்வெர்டர் அல்லாத ஏர் கண்டிஷனர்களிலிருந்து இன்வெர்டர் ஏர் கண்டிஷனர்களின் வேறுபாடும் ஆகும்.

ஒரு இன்வெர்டர் அல்லாத ஏர் கண்டிஷனரில், கம்ப்ரசர் மோட்டார் எப்போதும் உயர் ஆற்றலுடன் (உச்ச‌ ஆற்றல்) செயல்படுகிறது, அல்லது முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. இதுவே தேவையற்ற மின்சார நுகர்வு மற்றும் அதிக மின் கட்டணத்திற்கும் வழிவகுக்கிறது.


ஆனால் ஒரு இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனரின் திறம் யாதெனில், கம்ப்ரசர் மோட்டார் வேகத்தினை கட்டுப்படுத்தி, நிறுத்த‍ ஆரம்ப சுழற்சிகள் (start-stop cycles) நீக்குகிறது. இந்த முறை ஏர் கண்டிஷனர்களால் குறைவான‌ செயலிழப்பு வாய்ப்புகள் மற்றும் மலிவான மோட்டார் இயக்கத்திற்கும் வழி செய்கிறது.


ஒரு இன்வெர்டர் ஏர் கண்டிஷனரின் பயன்பாடு, 30-50% வரை மின்சார பில்லினை குறைக்க‌ உதவுகிறது.

இன்வெர்டர் ஏர் கண்டிஷனர், ஒரு விலையுயர்ந்த முதலீடு போல் தோன்றலாம், ஆனால் அது நிச்சயமாக நீண்ட கால காசு சேமிப்பினை அளித்து, உங்கள் மின்சார பில்லை குறைக்கிறது.
அடுத்த காற்றுச்சீரமைப்பி வாங்குவதற்கு முன்னர், உங்கள் மனதில் இந்த புள்ளிகளை வைத்து ஆலோசனை செய்யலாமே!!!.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.