ஒரு மின் உபகரணம் வாங்கும் முன் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்த்து வாங்குகிறீர்களா?

Five Star Electrical Appliances, Accessories and electric current savings.

ஒரு மின் உபகரணம் வாங்கும் முன் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்த்து வாங்குகிறீர்களா? உங்களின் மின் கட்டணத்தினை சேமிக்கும் திறவுகோல் தான் அந்த‌ மதிப்பீடு. சிலர் இதனை கவனிப்பதே இல்லை.

கோடையில் காற்று பதனி (ஏர் கண்டிஷனர் ) வாங்க‌ செல்லும் முன் இம்முதலீட்டினை திட்டமிடுங்கள். ஏனெனில் ஐந்து நட்சத்திர‌ தரத்தினை உடைய‌ மாதிரியினை கவனித்து வாங்கவும். 2010 ஆம் ஆண்டு முதல் மின் சாதன ஆற்றல் திறன் பொறுத்து, ஐந்து நட்சத்திர பெயரிடல் வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. இத்தரம் குளிர்பதன பெட்டிகள், குழாய் விளக்கு(tubelights) மற்றும் பிற‌ மின் உபகரண‌ங்கள் மீது கட்டாயமாக விதிக்கப்பட்டது.

எரிசக்தி சேமிப்பு (பீ) பணியகம் மாறுபட்ட மின்சுற்றுகளை கொண்ட‌ மின் உபகரணங்களுக்கு ஸ்டார் பெயரிடல் பற்றி ஒரு தேசிய அளவிலான கல்வி திட்டத்தினை துவங்கியது. அவர்கள், எமர்சன் கிளைமேட் டெக்னாலஜிஸ் மற்றும் இந்திய சர்வதேச காப்பர் கவுன்சில் இணைந்து, பெங்களூரில் உள்ள‌ விற்பனையாளர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி திட்டம் துவங்கி பிற‌ மாநிலத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு நட்சத்திர தரம் கொண்ட‌ பொருட்கள் மீது பிஇஇ பயிற்சியளித்தது. இந்த விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆற்றல் திறன் கொண்ட‌ மின் உபகரனங்களை தேர்வு செய்ய‌ உதவுகின்றனர்.

2010 ல் மூன்று நட்சத்திரங்கள் மட்டுமே பெற்ற‌ ஜன்னல் வகை காற்று பதனாக்கி(Window AC) இப்போது 5 நட்சத்திரத்தினை பெற்றுள்ளது.

மின்சார சேமிப்பு

* இந்தியாவில், காற்று பதனி (ஏர் கண்டிஷனர் ) சராசரியாக ஒரு நாளில் எட்டு மணி நேரமும் மற்றும் வருட‌த்தில் 252 நாட்கள் ஓடுகின்றன‌.

* நட்சத்திர பெயரிடல்,ஜனவரி 2010 ஆம் ஆண்டிலிருந்து குளிர்பதன பெட்டிகள், காற்று பதனி (ஏர் கண்டிஷனர் ) , குழாய் ஒளிரும் விளக்குகள் மற்றும் விநியோக மின்மாற்றிகள் மீது மதிப்பிடுதல் கட்டாயமாக்கப்பட்டது. வண்ண தொலைக்காட்சிகள், கூரை விசிறிகள், வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் எல்பிஜி அடுப்புகளில் மீதும் விதிக்கும் கட்டாயத்தில் இருந்தன‌.(2010ல்).

* ஐந்து நட்சத்திர ஏசி [காற்று பதனி (ஏர் கண்டிஷனர் )] குறைந்த ஆற்றலினை மட்டுமே பயன்படுத்துகிறது. பிஇஇ படி, ஒருவர், ஒரு நட்சத்திர ஏசி வாங்கினால் 100 ரூபாய் மின்சார‌ செலவு உண்டாகும் இடத்தில், ரூபாய் 69 மட்டுமே ஐந்து நட்சத்திர ஏசி வாங்கினால் செலவாகும்.

காசு சேமிப்பு

காசு சேமிப்பு என்பது முதலீட்டில் அல்ல‌. முதலிடும் பொருளின் தரத்தினை பொறுத்தது . ஆதன் ஆயுளை பொறுத்ததே ஆகும். ஏனெனில் சிறந்த‌ உற்பத்தியாளர்கள் என்றுமே சிறந்த‌ பொருட்களை வழங்குகின்றனர் என்பது நம்பிக்கையே. நிர்ணயமானாலும் நிச்சயம் அல்ல‌???????.

நாள் : 18.04.2013 திருத்தம் : 26.04.2014

புதியவை / Recent Articles