வெளியிட்ட தேதி : 04.11.2013
Makarasana Yoga
ஆரோக்கியம்

Maharasana : Yoga

Maharasana : Yoga

விரிப்பில் குப்புறப் படுத்து கொள்ளுங்கள். உள்ளங்கால்களை மேல் நோக்கி வைத்துக்கொள்ளுங்கள். கைகளை முன்னோக்கி நீட்டியபடி படுத்திருங்கள். முகவாய் தரையைத் தொட்டிருக்கவும். கால் விரல்கள் வெளிப்புறம் நோக்க,குதிகால்கள் இரண்டும் ஒன்றை ஓன்று பார்க்க கால்களைச் சிறிது அகட்டி வைத்துக்கொள்ள‌வும்.

வலது பக்க உள்ளங்கையால் இடதுபுற‌ தோளையும், இடது பக்க உள்ளங்கையால் வலது தோளையும் பற்றவும். முன்கைகள் சேருமிடத்தில் முகவாயை வைக்கவும். சாதாரணமாக மூச்சுவிட்டு இந்நிலையில் சுமார் 2 நிமிடம் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.

இவ்வகை யோகாசனம் தூக்கமின்மை குறைக்க‌ வழிசெய்கிறது. முழுமையான‌ பயிற்சி தூக்கமின்மையை முற்றிலுமாக‌ப் போக்குகிறது. உடலுக்கு நல்ல ஓய்வினைக் கொடுக்கின்றது. முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் கோளாறுகளை நீங்குகிறது. மனதிற்கு நல்ல‌ புத்துணர்ச்சியைத் தருவதுடன் மன‌ இறுக்கத்தை போக்க உதவுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.